கடுமையான சட்டங்களை தளர்த்தும் ஐக்கிய அரபு அமீரகம்

299 Views

200 நாடுகளை சேர்ந்த சுமார் 8.44 மில்லியன் மக்கள் வாழும் ஐக்கிய அரபு அமீரகம், ஒரு சில புதிய சட்டங்களை அறிமுகப் படுத்தியுள்ளது.

பல்வேறு கட்டங்களில் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலிஃபா பின் சயீத் அல் நஹ்யான், புதிய சட்டங்களுக்கான உத்தரவுகளை நவம்பர் 7, 2020 அன்று அறிவித்தார். அத்தோடு இது உடனடியாக அமல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விவாகரத்து, பிரிந்து வாழ்தல், சொத்து பிரிவினை, மது அருந்துதல், தற்கொலை, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் உடனான பாலியல் உறவு, பெண்கள் பாதுகாப்பு ஆகியவை தொடர்பான சட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அமீரகத்தின் இந்த மாற்றங்கள் குறித்து, சர்வதேச சட்ட அமைப்பான பேக்கர் மெக்கென்சியை சேர்ந்த வழக்கறிஞர் அமிர் அல்காஜா கூறுகையில்”முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் கூட்டும் விதத்தில் இந்த புதிய சட்ட மாற்றங்கள் அமைந்துள்ளது என்றார்.

சமீப காலங்களில் வெளிநாட்டுச் சமூகத்தினரை நேரடியாக தாக்கும் அளவிற்கான பல சட்டங்களை ஐக்கிய அரபு அமீரக அரசு திருத்தியுள்ளது என்று கூறும் அவர், உதாரணமாக கோல்டன் விசா திட்டம், தொழில் முனைவோருக்கான ரெசிடன்சி விசாக்கள் ஆகியவற்றில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களைக் கூறலாம் என்கிறார்.

மேலும் சமீபத்தில் ஜக்கிய அரபு அமீரகத்துடனான உறவை மேம்படுத்தியது இஸ்ரேல். இஸ்ரேல் உடனான உறவுகளை அமெரிக்காவின் உதவியுடன் சீராக்கியதை தொடர்ந்து இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதன் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு  ஏற்கனவே இஸ்ரேலிய சுற்றுலா வாசிகளும் முதலீட்டாளர்களும் அதிகரித்துள்ளனர்.

Leave a Reply