அமெரிக்காவில் அரசு முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தத்துக்கு செனட் ஒப்புதல்

அமெரிக்க வரலாற்றில் நீண்ட அரசு முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்துக்கு செனட் அவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

செனட்டில் குடியரசுக் கட்சி தலைவர்களுடன் எட்டப்பட்ட உடன்படிக்கைக்கு, ஜனநாயகக் கட்சியின் சில செனட்டர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் 40 நாட்களாக நீளும் அரசு முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் அறிகுறி இது. அரசு சேவைகள் மீண்டும் தொடர்வதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.

ஆனால், அந்த ஒப்பந்தம் இன்னும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபையின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

இந்த அரசு முடக்கத்தின் காரணமாக இலட்சக்கணக்கான அரசு பணியாளர்கள் சம்பளம் இல்லாமல் தவிக்கிறார்கள். விமான சேவை உள்பட அமெரிக்கா முழுவதும் பல சேவைகளை இது பாதித்தது.

இதனால் டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சி மகிழ்ச்சியாக இருக்குமென்றும், அதேசமயம் இது ஜனநாயகக் கட்சியினரிடையே பிளவை ஏற்படுத்தலாம் எனவும் கூறப்படுகின்றது.

நன்றி- பிபிசி தமிழ்