சர்வதேச தளத்தில் தமிழ்தேசியத்திற்காக போராடகூடியவர்களை தெரிவு செய்யுங்கள்- வி. உருத்திரகுமாரன்

சர்வதேச தளத்தில் தமிழ்தேசியத்திற்காக போராடகூடியவர்களை தெரிவு செய்யுங்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்  பிரதமர் வி. உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம்  ZOOM Webminar  வழியிலாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என கேள்வி கேட்கப்பட்டது அதன்போதே மேற்கொண்டவாறு தெரிவித்தார். இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்

” சிறிலங்கா பராளுமன்றத்திலோ, அதன் அரச கட்டமைப்பினுள்ளோ தமிழ் தேசிய பிரச்னைக்கு தீர்வு காண இயலாது”

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அரசவை சிறப்பு அமர்வாக கடந்த யூலை 18 தேதி கூடி சிறிலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கூடி விவாதித்துஇ கீழ் வரும் நிலைப்பாடுகளை எடுத்துள்ளது.

எதிர்வரும் ஓகஸ்ற் 5ம் தேதி இடம்பெற இருக்கின்ற சிறிலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் தமிழர்களைப் பொறுத்தவரை சட்டபூர்வமானதாகவோ,தார்மீகபலம் கொண்டதாகவோ இல்லை.

இந்த தேர்தல் மட்டுமல்ல 1972ம் ஆண்டுஇ 1978ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டங்களினுள் கீழ் நடைபெற்ற அத்தனை தேர்தல்களும் தமிழர்களைப் பொறுத்தவரையில் சட்டபூர்வமானதாகவோஇ அன்றி தார்மீகரீதியாகவோ கட்டுப்படுத்தாது.

ஏனெனில் 1972ம் ஆண்டு அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்திலும்இ பின்னர் 1978ம் ஆண்டின் அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்திலும் தமிழர்கள் எவரும் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. அந்த அரசியலமைப்பு சட்டங்கள தமிழர்கள் மேல் திணிக்கப்பட்டவை ஆகும்.

மேலும் நாடாளுமன்றத்துக்கு போவதால் தமிழ் தேசிய பிரச்சனையைத் தீர்க்க இயலாது. தமிழர் பிரதேசங்களின் ஆசனங்கள் மொத்தம் 23. நடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 226. இதில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் 10ல் 1வீதத்திலும் குறைந்தது. எனவே நாடாளுமன்றத்துக்கு போவதால் தமிழர்களால் எதனையும் சாதித்துவிடமுடியாது.

ராஜபக்சக்களின் கட்சி நாடாளுமன்றத்தில் 3இல் 2 பங்கு ஆசனங்களை பெறாமல் போனாலும்இ 3ல் 2 சிங்கள கட்சிகளுடையதாகவே இருக்கும்.

குடியுரிமைச்சட்டம், தனிசிங்கள சட்டம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என தமிழர்களுக்கு எதிரான பல சட்டங்கள்,தமிழர்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்தில் இருக்கும் நிலையிலேயே சிங்கள ஆட்சியாளர்களால் நிறைவேற்றப்பட்டன. தமிழர்களால் இதனை தடுக்க முடியவில்லை.

தமிழர்கள் அமைச்சர்களாகவும், இரண்டு முறை எதிர்கட்சித் தலைவர்களாகவும் இருந்திருக்கின்றார்கள். அப்படியிருந்தும் அவர்களால் தமிழர்களின் நலன்சார்ந்து எதனையுமே செய்ய முடியவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலர் பான் கீ முனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுஇ தமது அறிக்கையில் சிறிலங்கா அரசியலில் தமிழர்களுக்கு ஒரு காத்திரமான பங்கு இல்லாமை, இலங்கையின் இனப்பிரச்சனைக்கு முக்கியமான ஒரு காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது சிறிலங்கா ஒரு ஜனநாயக நாடல்ல. அது ஒரு இனநாயக நாடு. அதன் அரசியல் அலகுகளில் சிங்கள பௌத்த பேரினவாதம் இறுகிப் புரையோடிப்போயுள்ளது. எனவே சிறிலங்காவில் பராளுமன்ற அரசியலில் இதனோடு பேரம் பேசும் சக்தி தமிழர்களுக்கு இருந்திருக்கவும் இல்லை. இருக்கப் போவதும் இல்லை.

இதனைப் பார்க்கும் போதுஇ தமிழர்கள் ஏன் இதன் தேர்தலில் போட்டியிட வேண்டும் என வினா எழுகின்றது.

சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் தமிழர் தேசிய பிரச்சனைக்கு தீர்வினைக் காண முடியாது என்றபோதும்இ அதனை ஒரு மேடையாக, களமாக, கருவியாக நாம் கையாள வேண்டும். சர்வதேசம் நோக்கி எமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிக்காட்டுவதற்கான ஒரு கருவியாக இத்தேர்தல்களையும்,பாராளுமன்றத்தையும் கையாள வேண்டும்.

மேலும் 1985ல் இருந்து எமது தேசிய பிரச்சனை கொழும்பைக் கடந்து திம்புவுக்கு சென்றது. பின்னர் ஆயிரம் ஆயிரம் மாவீரர்களதும்இ மக்களதும் உயிர்த்தியாகத்தினாலும், அளப்பரிய அர்பணிப்புக்களாலும், வீரத்தினாலும் அது திம்புவில் இருந்து தாய்லாந்து, ஜெனீவா, நோர்வே,சுவிஸ் என்று அனைத்துல அரசியல் வெளியினை நோக்கி சென்றுவிட்டது.

இந்நிலையில் தேர்வு செய்யப்படும் தமிழர் பிரதிநிதிகள் இந்த சர்வதேச தளத்தில் எமது தேசிய அரசியல் பெருவிருப்பினை கொள்கையாகவும்இ செயற்பாடாகவும் கொண்டு செல்லக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.

– ஈழத்தமிழர்களின் அரசியல் பெருவிருப்புக்களாக தாயகமும்,புலமும் இணைந்த ஒரு பொதுவாக்கெடுப்பு மூலமே தமிழர்களின் தேசிய பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும்.

– இனப்படுகொலைஇ மானிடத்துக்கு எதிரான குற்றங்கள்இ போர்குற்றகள் புரிந்த சிறிலங்கா அரசியல், இராணுவ தலைவர்களை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.

– நடந்தேறிய சர்வதேச குற்றங்கள் ‘systemic crime ‘ என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தமிழர்களுக்கு எதிராக புரியப்பட்ட குற்றங்கள் என்பது தனிநபர்களாலோ, ஒரு குறிப்பிட்ட இராணுவப் பிரிவினாலோ அல்ல. இது சிறிலங்கா என்ற ‘அரசு’ செய்த குற்றமாகவே உள்ளது. எனவே சிறிலங்கா அரசை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் இனஅழிப்புக்கு எதிரான சர்வதேச சட்டத்தின் கீழ்இ கொண்டு தமிழர் பிரதிநிதிகள் பாடுபடுவேண்டும்.

சிறிலங்கா ஆட்சியாளர்கள் தமிழர்களை சிறிலங்கன் என்ற பெயரில் தமிழர் என்ற தேசிய இன அடையாளத்தினை சிதைத்து, சிங்களத்துடன் கரைக்கும் முயற்சியில் ஈடுபடும் அதே சமயம்,வெளியுறவுக் கொள்கையில் தந்திரமாக யாதார்த்தத்தினை கடைப்பிடித்து ‘சமரசமான’ நிலைப்பாட்டை எடுப்பார்கள்.

சர்வதேச சக்திகளும் தமது நலன்களின் அடிப்படையில் சிங்கள ஆட்சியாளர்களுடன் சமரசம நிலைiயில் உறவாடுவார்கள்.

இவற்றை எதிர்கொண்டு தமிழர் பிரதிநிதிகள் அரசுகளின் நிலைப்பாட்டை நாம் அறிந்தவர்கள் என்பதனை அவ் அரசுகளுக்கு உணர்த்திக் கொண்டு அதேசமயம் இணக்க அரசியல் என்ற பெயரில் தமிழர்களின் நலன்களை பலி கொடுக்காமல், அரசுகளின் நிலைப்பாடுகளின்அரசுகளின் நலன்ங்களும்இ தமிழர்களின் நலன்களும் ஒற்றைப்புள்ளியில் சந்திக்கின்ற சாணக்கியங் கொண்டவர்களாக இருக்க வேண்டும். செயலாற்ற வேண்டும்.

தமிழீழத் தேசியத் தலைவரின் கூற்றின் படி, எந்தவொரு அரசியல் முன்னெடுப்புக்கும் பலம் அவசியம். எனவே சர்வதேச தளத்தில் அரசியலை மேற்கொள்வத்கு சாணக்கியத்துடன் மக்கள் சக்திகளை வலுவாக அணிதிரட்ட கூடியவர்களை மக்கள் தேர்வு செய்யவேண்டும்.

லொபியிங்  ( lobbying)  என்பது நித்திரை கொள்பவனை எழுப்புவது அல்ல. லொபியிங் என்பது நித்திரை மாதிரி நடிப்பவனை எழுப்பவது ஆகும் என திரு. சத்தியேந்திரா குறிப்பிடுவார்.

முன்னாள் நீதியரசர், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்ணணி ஆகிய கட்சிகளது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களுக்கான பொதுவாக்கெடுப்பு குறித்து உள்ளடக்கப்பட்டிருப்பது நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தருவதாக உள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்கள் தம்மை தாமே ஆளும் உரிமை உள்ளவர்கள் என தெரிவித்ததை வரவேற்கிறோம் ஆனால் அதை எவ்வாறு செயற்படுத்த போகிறோம் என்பதை தெரிவிக்கவில்லை அது வருத்தமளிக்கிறது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமிழர் இனப்பிரச்சனை தீர்வுக்கான பொறிமுறையாக பொதுவாக்கெடுப்பு தொடர்பில் தனது அரசவiயில் 2014ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியிருந்ததோடு, அதற்கான மக்கள் இயக்கம்  yes to referendum ஒன்றினை கட்டியெழுப்பியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பன்னாட்ட வல்லுனர் குழுவொன்றும்,தமிழர்களின் பொதுவாக்கெடுப்புக்கான அவசியத்தினை முன்னிறுத்தி பிரச்சார முன்னெடுப்பினை தொடுத்துள்ளது.

இந்த தேர்தலில் தமிழர்களின் தேசிய அரசியல் பரப்பு, சாதி,மத பேதங்களாக பிளவுபட்டுவிடுமோ என்ற அச்சத்தினையும் நமக்கு ஏற்படுத்துகின்றது. இவற்றை எல்லாம் கடந்ததுதான் விடுதலை அரசியல். விடுதலை அரசியல் என்பது வாக்கு வங்கி தேர்தல் அரசியல் அல்ல.

தேர்தலுக்கு பின்னராக முன்னோக்கி செல்ல வேண்டிய பாரிய அரசியல் செற்பாடு தமிழர் தேசத்துக்கு உண்டு. சிறிலங்காவின் தேர்தல் அரசியல் மாயைகளுக்கு தலையைபுதைக்காமல், நாம் தேசமாக நிமிர்ந்து நிற்க்க தமிழ் தேசிய பேரியக்கம் ஒன்று கட்டியெழுப்பபடவேண்டும். அதனை நோக்கியே தமிழர் பிரதிநிதிகள் முன்கையெடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.