ரிஷாத்தின் வாசஸ்தலத்தின் இரண்டு அறைகளுக்கு ‘சீல்’

212 Views

10 ரிஷாத்தின் வாசஸ்தலத்தின் இரண்டு அறைகளுக்கு 'சீல்'முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், அமைச்சராக இருந்த காலத்தில் பயன்படுத்திய உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் இரு அறைகள் சீல் வைக்கப்பட்டன.

கொழும்பு பௌத்தலோக மாவத்தையிலுள்ள, ரிஷாத்தின் வீட்டில் பணிப் பெண்களாக பணியாற்றிய சிறுமி உட்பட 11 பேரில், 9 யுவதிகள் இதுவரையிலும் வாக்கு மூலங்களை வழங்கியுள்ளனர் என விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடலில் சூடு வைத்தமை, தாக்கியமை மற்றும் ஏனைய துன்புறுத்தல்களுக்கு முகங் கொடுத்தமை உள்ளிட்டவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப் படுகின்றன.

அந்த உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் இடம் பெற்றிருக்கலாம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அந்த இரு அறைகளுக்கும் சீல் வைக்கப்பட்டன.

தற்போது, அந்த வாசஸ்தலம் அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு வழங்கப் பட்டுள்ளது. ஆனால், அவர் அதனை தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவு பொதியிடும் தளமாக பயன்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply