பௌத்த பிக்குகள் புடைசூழ வந்து சமன் பந்துலசேன வடக்கு பிரதம செயலாளராக பதவியேற்பு

259 Views

8 3 பௌத்த பிக்குகள் புடைசூழ வந்து சமன் பந்துலசேன வடக்கு பிரதம செயலாளராக பதவியேற்புவடக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக சமன் பந்துலசேன இன்று பதவியேற்றார். வவுனியாவிலிருந்து பெளத்த பிக்குகள் புடைசூழ கைதடி வந்த அவர், சுபநேரமான முற்பகல் 11.45 மணியளவில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோக பூர்வமாகப் பொறுப்பேற்றார்.

வடக்கு மாகாண பிரதம செயலாளராகக் கடமையாற்றிய அ.பத்திநாதன் அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்றுள்ள நிலையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் பதவி வெற்றிடமாகக் காணப்பட்டது

வவுனியா மாவட்ட அரச அதிபராகக் கடமையாற்றிய சமன் பந்துலசேன கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால் வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டு, இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் அதிகம் வசித்து வரும் நிலையில் தமிழ் பேசும் ஒருவர் வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்படாது சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவர் வடக்கு மாகாணத்துக்குப் பிரதம செயலாளராக நியமிக்கப் பட்டமைக்கு அரசியல் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில் சமன் பந்துலசேன தனது கடமையைப் பொறுப்பேற்றுள்ளார்.

Leave a Reply