இலங்கையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சரான க.வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்றம் செல்வதற்கு முன்னதாக பல்லாயிரக்கணக்கான மக்கள் 2009இல் உயிர் நீத்த இடமாகிய முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருக்கின்ற நினைவு தூபியில் சற்று முன்னர் அஞ்சலி செலுத்தினார்
இந்நிகழ்வில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.