உக்ரைன் மீது ரஷ்யா போர்: தங்கம், கச்சா எண்ணெய் விலை உச்சம்- பங்கு சந்தைகள் சரிவு

311 Views

உக்ரைன் மீது ரஷ்யா போர்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியுள்ளதால், தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இந்திய பங்கு சந்தைகள் சரிவு கண்டுள்ளன.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு தமிழகம் -சென்னையில் ரூ.864 அதிகரித்துள்ளது. மேலும், ரஷ்யாவின் தாக்குதலை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டொலராக உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததை அடுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரை  எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil News

Leave a Reply