கடந்த வாரம் ரஸ்யா புதிய எல்லைகள் அற்ற தூரவீச்சுக் கொண்ட அணுசக்தியில் இயங்கும் ஏவுகணையான பியூரெவெஸ்ம்னிக் ஏவுகணையை பரிசோதித்துள்ளது.
இந்த ஏவுகணை உலகின் பாதுகாப்பை தலைகீழாக மாற்றி யுள்ளது என அமெரிக்காவின் முன் னாள் இராணுவ அதிகாரியான ஸ்டானிஸ்லாவ் கிராபிவ்னிக் தெரி வித்துள்ளார். இந்த ஏவுகணை 14,000 கி.மீ தூரத்தை கடந்து சென்றுள்ளது. விமான எதிர்ப்பு மண்டலங்களை தாண்டிச் சென்று அவர்கள் எதிர் பார்க்காத திசையில் இருந்து எதிரி களை தாக்கும் திறன் வாய்ந்தது. அதாவது இதனை ரஸ்யா பல நாட்களாக வானில் நிலைநிறுத்தி வைக்க முடியும் எனவே ரஸ்யா வேறு நாடுகளால் அணுவாயுதம் மூலம் தாக்கப்பட்டால் ரஸ்யாவின் இந்த ஏவுகணை உடனடியாகவே தனது இலங்கை தாக்கி அழிக் கும் என்று கிராபிவ்னிக் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கோல்டன் டோம் என்ற ஏவுகணை தடுப்பு வளையம் 2030 ஆம் ஆண்டுக்கு முன்னர் அமைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை. ஆனால் அதற்கு முன்னர் ரஸ்யாவும், சீனாவும் அதனை அழிப்பதற்கான ஆயுதங்களில் முன்னேறிவிட்டன.
தற்போதுள்ள அமெரிக்காவின் ஏவுக ணைத் தடுப்பு முறைகள் என்பது ரஸ்யா, சீனா, வடகொரியா போன்ற நாடுகளில் இருந்து வரும் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் பாதைக ளில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஏவுகணைகள் வரும்போது அமெரிக்கா வழி யில் இடைமறித்து தாக்கி அழித்துவிடும். எனவெ அமெரிக்காவை முற்றாக மூடி மறைக்க வேண்டியதில்லை. ஆனால் இந்த புதிய ஏவுகணையானது இந்த பாதைகளை தவிர்த்து உலகைச் சுற்றிவரும் சக்தி கொண்டது. எனவே தற்போது அமெரிக்கா தன்னை முற்றாக மூடி மறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது.
திரவ அல்லது திண்ம எரிபொருட்கள் இல்லாது சிறிய அணுசக்தி றியக்டர் மூலம் இயங்கும் இந்த ஏவுகணை அளவு கடந்த தூரம் செல்லும் சக்தி கொண்டதுடன், அது சாதாரண குண்டுகள் மற்றும் அணுக்குண்டுகளையும் சுமந்து செல்ல வல்லவை.



