ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா பயணம்

332 Views

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா பயணம்

இந்தியா – ரஷ்யா இடையிலான மாநாட்டில் பங்கேற்க, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தியா – ரஷ்யா இடையிலான மாநாடு ஆண்டு தோறும் நடப்பது வழக்கம். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவில்லை.

இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட அந்த மாநாடு இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு இன்று பயணமாகின்றார்.

டெல்லியில் நடக்கும் இந்த மாநாட்டில்,   பிரதமர் நரேந்திர மோடியை, விளாடிமிர் புடின் சந்தித்துப் பேச உள்ளார். இதில் இருதரப்பு உறவுகளை வலுபடுத்துவது குறித்து இருநாட்டுத் தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த சந்திப்பில் இருநாடுகளுக்கும் இடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன.

ilakku Weekly Epaper 159 December 05 2021 Ad ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா பயணம்

Leave a Reply