நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு இரண்டு வருடங்களுக்கு நிலக்கரி வழங்க ரஷ்ய நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது.
நிலக்கரி விநியோகத்திற்கான விலைமனு கோரலுக்கு பதிலளித்த இரண்டு நிறுவனங்களில், ரஷ்ய நிறுவனம் ஏலம் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகம் கொண்டுள்ளதாகவும், மற்றைய நிறுவனங்களும் மேன்முறையீடு செய்யலாம் என்றும் லங்கா நிலக்கரி நிறுவனத்தின் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ஜகத் பெரேரா தெரிவித்தார்.
ஒக்டோபர் இறுதி வரை போதுமான நிலக்கரி கையிருப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஐந்து மாத கடன் சலுகை காலத்தை கோரியதாகவும் ரஷ்ய நிறுவனம் ஆறு மாதங்களை வழங்க ஒப்புக்கொண்டது எனவும் ஒக்டோபர் முதல் நிலக்கரியை இறக்குமதி செய்யத் தொடங்குவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.