ரஷியாவிற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் – ஐ.நா. கூட்டத்தில் அமெரிக்கா பதில்

ரஷியாவிற்கு கடுமையான பதிலடி

உக்ரைன் மேலும் ஆக்கிரமிக்கப்பட்டால் ரஷியாவிற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசர கூட்டத்தில் அமெரிக்க பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் விவகாரத்தில் திடீர் அறிவிப்பாக, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீகரிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார்.

உக்ரைன் மேலும் ஆக்கிரமிக்கப்பட்டால், அதன் விளைவுகள் உலகம் முழுவதும் முக்கியமானதாக இருக்கும், ஐரோப்பா முழுவதும் அகதிகள் நெருக்கடி இருக்கும்.

இந்த அறிவிப்பு காரணமாக, உக்ரைன் விவகாரத்தில் பதற்றம் இன்னும் அதிகரித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளன.உக்ரைனில் உள்ள ரஷ்ய சார்பு பிராந்தியங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில்,உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் இன்று அவசர கூட்டத்தை தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் பிரதிநிதி லிண்டா தாமஸ்-கிரீன்பீல்ட் பேசுகையில்,

“ரஷ்ய அதிபர் புடினின் இந்த நடவடிக்கை, உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை மீதான ரஷ்யாவின் தெளிவான தாக்குதல் ஆகும். இது உக்ரைனின் ஐ.நா. உறுப்பு நாடு என்ற அந்தஸ்து மீதான தாக்குதலாகும். இது சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை மீறும் நடவடிக்கை.

உக்ரைன் போரை தூண்டியதாக ஒரு சாக்குப்போக்கை உருவாக்க ரஷ்யா முயன்றது. இந்த நடவடிக்கை, உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பிற்கான ரஷ்யாவின் முயற்சியாகும். இது ஒரு போர்ச் சூழலை உருவாக்கியுள்ளது.

உக்ரைன் மேலும் ஆக்கிரமிக்கப்பட்டால், அதன் விளைவுகள் உலகம் முழுவதும் முக்கியமானதாக இருக்கும், ஐரோப்பா முழுவதும் அகதிகள் நெருக்கடி இருக்கும் என்றார்.

Tamil News