ரஷ்யா- உக்ரேன் பதற்றம்: அகதிகளின் வருகையை எதிர்கொள்ளத் தயாராகும் கிழக்கு ஐரோப்பா

ரஷ்யா- உக்ரேன் பதற்றம்

ரஷ்யா- உக்ரேன் பதற்றம்: ரஷ்யா- உக்ரேன் இடையிலான போர் நெருக்கடி அதிகரித்தால், உக்ரைனிலிருந்து பலர் அகதிகளை வெளியேறக்கூடும் எனப்படுகிறது.

இதையடுத்து அகதிகளின் வருகையை எதிர்கொள்ள பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள் தயாராகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில், வரும் 16ஆம் திகதி ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுக்க வாய்ப்புள்ளது என்று சில மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் சூழலில், அந்த நாளன்று யுக்ரேன் மக்கள் ஒற்றுமையுடன், தேசிய கொடியை ஏற்றி, தேசிய கீதத்தைப் பாட வேண்டும் என்றும் அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

Tamil News