ரஸ்யா – உக்ரைன் போருக்கு நேட்டோவே காரணம் – சீனா

 உக்ரைன் போருக்கு நேட்டோவே காரணம்

உக்ரைன் போருக்கு நேட்டோவே காரணம்

உக்ரைனில் போர் ஏற்படுவதற்கான இறுதிப் புள்ளிவரை வட அத்திலாந்திக் கூட்டமைப்பு எனப்படும் நேட்டோ கூட்டமைப்பே இரு நாடுகளையும் இட்டுச் சென்றது என சீனா குற்றம் சுமத்தியுள்ளது.

உக்ரைன் விவகாரம் தொடர்பில் சீனாவின் கருத்துக்களை அமெரிக்கா கவனமாக கேட்கவேண்டும்.  உக்ரைன் விவகாரத்தை கையாளுவதற்கோ அல்லது ரஸ்யா தொடர்பில் முடிவெடுப்பதற்கோ எமக்கு பூரண சுதந்திரம் உண்டு. எமது நலன்களும் அதில் முக்கியமானது என்பதை அமெரிக்கா உணர்ந்துகொள்ள வேண்டும் என சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் சகவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத் தடைகள் அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்தாது மாறாக நிலமையை மேலும் கடினமாக்கும், இதனால் பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும்.

நாம் எரிவாயு மற்றும் எண்ணை உட்பட பல வர்த்தகங்களில் தொடர்ந்தும் ரஸ்யாவுடன் பணியாற்றுவோம். அதில் இருதரப்பு நன்மையும் உண்டு. அதேசமயம் உக்ரைனில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக 5 மில்லியன் யூவான்களையும் வழங்கவுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.