போர் நிறுத்தம் அறிவித்த மேரியோபோல் நகரில் தொடர்ந்து ரஷ்யா தாக்குதல் – சிக்கிக்கொண்ட மக்கள்

294 Views

தொடர்ந்து ரஷ்யா தாக்குதல்

மேரியோபோல் நகரில் தொடர்ந்து ரஷ்யா தாக்குதல்

ரஷ்யா போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்த உக்ரைனின் இரண்டு நகரங்களில் ஒன்றான மேரியோபோலில் ரஷ்யா வெடி குண்டு வீசுவதை தீவிரப்படுத்தியுள்ளது என்று அந்நகர மேயர் வாடிம் பாய்சென்கோ தெரிவித்துள்ளார்.

இந்த துறைமுக நகரம் “முற்றுகையின் மிக கடினமான கட்டத்தில்” இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

“குடியிருப்புப் பகுதிகள் மீது ஓயாத குண்டு வீச்சு நடந்துகொண்டிருக்கிறது. விமானங்கள் குடியிருப்புப் பகுதிகள் மீது குண்டு வீசிக்கொண்டிருக்கின்றன,” என பாய்சென்கோ கூறியதாக ஏ.பி. செய்தி முகமை தெரிவித்துள்ளது.

உக்ரைனின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடல் தொடர்பை துண்டிக்கவேண்டும் என்ற இலக்கோடு இந்த நகரின் மீது தீவிர தாக்குதல் தொடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

Leave a Reply