உக்ரைன்: மகப்பேறு, குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா குண்டுவீச்சு

425 Views

மருத்துவமனை மீது ரஷ்யா குண்டுவீச்சு

குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா குண்டுவீச்சு

நேற்று உக்ரைனின் மேரியோபோல் நகரில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனை ஒன்று, ரஷ்ய வான் தாக்குதலில் பாதிக்கப் பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கிக் கொண்டிருப்பதாகவும், இந்தத் தாக்குதலை ஒரு போர்க்குற்றம் என்றும் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறினார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள காணொளியில் தாக்குதலுக்குள்ளான மருத்துவமனை மிக மோசமாக சேதமடைந்துள்ளது தெரிகிறது. இதில் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் உட்பட குறைந்தது 17 பேர் காயமடைந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

மேரியோபோல் துறைமுக நகரத்தை உள்ளடக்கிய டொனெட்ஸ்க் பகுதியின் நிர்வாகத்தின் தலைவரான பாவ்லோ கைரிலென்கோ கூறுகையில், இந்த தாக்குதலில் இறப்புகள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், மருத்துவமனையில் இருந்த குழந்தைகள் யாரும் காயப்பட்டு உள்ளதாக தெரியவில்லை, என்றும் கூறினார்.

ரஷ்ய படையினர் மக்கள் வெளியேறுவதற்கான போர்நிறுத்தத்தை அறிவித்த நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது என வொலோடிமிர் ஸெலென்ஸ்கி குறிப்பிட்டிருக்கிறார் என இன்டர்ஃபாக்ஸ் உக்ரைன் (Interfax Ukraine) வெளியிட்டுள்ள செய்தியில்  கூறப்பட்டுள்ளது.

Tamil News

Leave a Reply