செயற்கை நுண்ணறிவு திட் டத்தில் சீனா மிகவும் அதிகளவான முன்னற்றத்தை அடைந்துள் ளதால் சீனாவின் நிறுவனங்களுடன் இணைந்து ரஸ்ய அரசும், ரஸ்யாவின் மிகப்பெரும் வங்கியான Sberbank என்ற வங்கியும் செயற்படும் என ரஸ்ய அதிபர் விளமிடீர் பூட்டீன் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொடர்பில் கடந்த மாதம் இடம்பெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு பொறுப்பாக ரஸ்யாவின் பிரதமர் மிக்கெயில் மிசுஸ்ரினும், வங்கியின் தலைவர் ஹேர்மன் ரெப்பும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த செயற்திட்டம் தொடர்பான முதலாவது அறிக்கை எதிர்வரும் ஏப்பிரல் மாதம் வெளியிடப்படும். செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை ரஸ்யாவில் Sberbank வங்கியே முன்னெடுத்து வருகின் றது.
இந்த தொழில்நுட்பத்தில் சீனாவே உலகில் முன்னனியில் உள்ளது. அதனை விருத்தி செய்வதில் சீனா பெருமளவான முதலீடுகளைச் செய்துள்ளது. 2030 ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவில் சீனாவே உலகில் முன்னனியில் இருக்கும் என New Generation Artificial Intelligence Development Plan’ launched in 2017 என்ற திட்டம் தெரிவித்துள்ளது.
உற்பத்தித்துறை, சுகாதாரம், போக்குவரத்து என பல துறைகளில் அது செயற்கைத் தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள் ளது. 2014 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் 38,000 இற்கு மேற் பட்ட இந்த தொழில்நுட்டம் தொடர்பான காப்புரிமைகளை சீனா சமர்ப்பித்துள்ளது. அதாவது உலகில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொடர்பான காப்புரிமைகளில் இது 70 விகிதமாகும்.
இது தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளை வெளியிடுவதில் சீனா 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவை பின்தள்ளியுள்ளது. ரஸ்யாவில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாடங் கள் 5 முதல் 9 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர் களின் கல்வித்திட்டத்தில் கடந்த மாதம் இணைக் கப்பட்டுள்ளது.