‘எவராக இருந்தாலும் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கான விதிகள் ஒன்றே’: தொடரும் கொரோனா தடுப்பூசி சர்ச்சை 

அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கான விதிகள்

அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய எண்ணும் Surfing விளையாட்டு வீரர் கெல்லி ஸ்லேடர் மற்றும் பிற விளையாட்டு வீரர்களை எச்சரிக்கும் விதமாக பேசியுள்ள அவுஸ்திரேலியாவில்  விளையாட்டுத்துறை அமைச்சர் ரிச்சர்ட் கோல்பெக், அவர்களை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தியிருக்கிறார். இல்லையெனில் டென்னிஸ் வீரர் ஜோகோவிச் போன்று வெளியேற்றப்படுவீர்கள் என பொருள்படும் படி அமைச்சர் கோல்பெக் கருத்து கூறியிருக்கிறார். 

“அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கான விதிகள் அனைவருக்கும் ஒன்றே. நீங்கள் Surfer ஆக இருந்தாலும் சரி, டென்னிஸ் வீரராக இருந்தாலும் சரி,  சுற்றுலாவாசி அல்லது எவராக இருந்தாலும் சரி அது பற்றி கவலை இல்லை,” என கோல்பெக் தெரிவித்திருக்கிறார்.

டென்னிஸ் வீரர் ஜோகோவிச்  விவகாரத்தில், Surfing விளையாட்டு வீரர் கெல்லி ஸ்லேடர் அவுஸ்திரேலிய அரசை விமர்சிக்கும் விதமாக கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.