மியான்மரில் நிகழும் ரோஹிங்கியா இனப்படுகொலையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என ஐ.நா.விடம் கோரிக்கை விடுத்துள்ளது மலேசியாவில் இயங்கும் ரோஹிங்கியா மனித உரிமைகள் அமைப்பு. ஐ.நா. பொது பேரவையின் 75வது கூட்டத்தொடர் நடக்கும் சூழலில், இக்கோரிக்கையினை அந்த அமைப்பு முன்வைத்துள்ளது.
ரோஹிங்கியா மீதான இனப்படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்த மியான்மர் அரசு மீதான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும், மியான்மரில் ரோஹிங்கியாக்களை குடியுரிமையுள்ளவர்களாக அங்கீகரிக்க அழுத்தம் கொடுக்க வேண்டும், ஐ.நா. அமைதிக்குழுவை மியான்மருக்கு அனுப்ப வேண்டும், மியான்மருடனான அரசியல்- பொருளாதார உறவுகளை முறித்துக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ரோஹிங்கியா மனித உரிமைகள் அமைப்பு முன்வைத்திருக்கிறது.