டீசல் தட்டுப்பாட்டால் மணல், கல், கிரவல் விலைகள் அதிகரிப்பு 

334 Views

விலைகள் அதிகரிப்பு

விலைகள் அதிகரிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருட்களுக்கான தட்டுப்பாட்டினால் டீசலில் இயங்கும் இயந்திரங்கள் பல நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் டிப்பர் போன்ற வாகனங்களின் செயற்பாடுகள் அனைத்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மணல், கிரவல், கல் என்பனவற்றின் விலைகள் திடீரென்று அதிகரித்துள்ளது .

நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருட்களை பெற்றுக்கொள்வதால் குறித்த நேரத்திற்குள் தமது வேலைகளை முடித்துக்கொள்ள முடியவில்லை. நேர விரையத்தினால் குறிப்பிட்ட நேரத்திற்கு பொருட்களை கொண்டு சென்று வழங்க முடியவில்லை  என்று டிப்பர் சாரதிகள் தெரிவிக்கின்றனர் .

அத்துடன் கல் உடைக்கும் இயந்திரங்கள் பைக்கோ இயந்திரங்கள் என்பன அனைத்தும் டீசலில் இயங்கி வருகின்றன .

தற்போது ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாட்டினால் பல்வேறு இழுபறி நிலைமைகள் தாமதங்கள் ஏற்பட்டு வருகின்றன. சில வேளைகளில் கல் ,மணல், கிரவல் ஏற்றிய வாகனங்களுடன் வீதிகளில் டீசல் இன்றி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குறித்த பொருட்களுக்கான விலைகளை அதிகரிக்கவேண்டிய நிலைக்குத் தளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது .

இன்றையதினமும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் எரிபொருள்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் காத்திருக்கின்றனர்.

எரிபொருட்களின் தட்டுப்பாட்டினால் பல்வேறு அத்தியாவசியமான உணவு பொருட்களில் விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Tamil News

Leave a Reply