உலகுக்கே ஔிகொடுக்கும் சூரியனே எங்கள் செல்வங்களை கண்டீரோ- பாட்டு பாடி காணாமல் போன மகனை தேடியலையும் தாய்

170 Views

உலகுக்கே ஔிகொடுக்கும் சூரியனே

“உலகுக்கே ஔிகொடுக்கும் சூரியனே!, எங்கள் செல்வங்களை கண்டீரோ…? போன இடம் தெரியலயே.. இருக்கும் திசையும் தெரியலயே…” என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்திய போராட்டத்தில்  தாய் ஒருவர் பாடிய  இந்த பாடல் வரிகள் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற காணாமலாக்கப்பட்ட உறவுகள் நடத்திய போராட்டத்தில் தம் பிள்ளைகளின்  புகைப்படங்களை கையில் ஏந்தியவாறு பலர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் போது ஒரு தாய், தன் மகனை தேடி “உலகுக்கே ஔிகொடுக்கும்  சூரியனே!,எங்கள் செல்வங்களை கண்டீரோ…? போன இடம் தெரியலயே.. இருக்கும் திசையும் தெரியலயே …” என்ற பாடலை பாடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

Tamil News

Leave a Reply