ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் காரணமாக, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாலுள்ள, காலி வீதியில் வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
அதன்படி, காலி முகத்திடல் பகுதியில் இருந்து கொள்ளுப்பிட்டி நோக்கிய காலி வீதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்கள் குழுவின் 6 பேர் தங்களது ஆர்ப்பாட்டத்திற்கான கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி செயலகத்திற்குள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



