வடக்கிலுள்ள உணவகங்களும் மூடப்படும் நிலை

458 Views

வடக்கிலுள்ள உணவகங்களும் மூடப்படும் நிலை

வடக்கிலுள்ள உணவகங்களும் மூடப்படும் நிலை

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வடக்கில் உள்ள மக்களும்  நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாகவும், பல பகுதிகளில் உள்ள உணவகங்கள் எரிவாயு பற்றாக்குறையால் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய உணவகங்களும் தற்போது மூடப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் வாடிக்கையாளர்கள் உட்பட தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் . எரிபொருள் தட்டுப்பாடு நீங்கிவிட்டதாக அரசாங்கத்தினால் தெரிவிக்கப்படுகின்ற போதும் எரிவாயு விநியோக நிலையங்களில் தட்டுப்பாடு நிலவி வருகின்றது . இதனால் மக்களுக்கு எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியவில்லை .

உணவகங்களில் எரிவாயு தட்டுப்பாட்டினால் உணவகங்களை மூடவேண்டிய நிலை உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

Tamil News

Leave a Reply