கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம், இலங்கையில் உள்ள மத பன்முகத்தன்மையை காட்டுகின்றது- அமெரிக்கத் துாதர்

மத பன்முகத்தன்மையை காட்டுகின்றது

கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் மத பன்முகத்தன்மையை காட்டுகின்றது

கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம், இலங்கையில் உள்ள மத பன்முகத்தன்மையை வெளிப்படுத்துவதாக திகழ்வதுடன் நெகிழ்ச்சித் தன்மையினை வெளிக்காட்டுகின்றது என இலங்கை்கான அமெரிக்கத் துாதர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம்  கொழும்பில் அமைந்துள்ள கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அமெரிக்கத் துாதர் ஜூலி சங் பயணம் செய்திருந்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அவர் அஞ்சலியும் செலுத்தினார்.

இதையடுதது தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்த அவர்,“ உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த 5 அமெரிக்கர்கள் உள்ளிட்ட ஏனையவர்களையும் நாம் இந்த சந்தர்ப்பத்தில் நினைவு கூறுகின்றோம். அத்துடன் அமைதியாக நாம் அனைத்து மதத்தினருடனும் இணைந்து நிற்கின்றோம். இந்த ஆலயம் இலங்கையின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துவதுடன் நாட்டின் நெகிழ்ச்சித் தன்மையை வெளிக்காட்டுகின்றது” என மேலும் தெரிவித்துள்ளார்.