உலக நாடுகளிடம் கடன் பெற அமைச்சர்கள் குழு கூட்டத்தில் தீர்மானம்

427 Views

அமைச்சர்கள் குழு கூட்டத்தில்

இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கக் கூடிய நாடுகளுடன் கலந்துரையாடுவதற்காக அமைச்சர்கள் குழுவொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் நடைபெற்ற கூட்டத்தில், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இதற்கான யோசனையை முன்வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதையடுத்து அவரின் யோசனைக்கு அமைச்சர்கள் குழு கூட்டத்தில் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் படி, இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நிறுவனங்களுடன் கலந்துரையாடுவதற்காக அமைச்சர்கள் குழு கூட்டம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Leave a Reply