வடக்கின் புதிய பிரதம செயலரை மாற்றுங்கள்; மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள்

170 Views

NPC வடக்கின் புதிய பிரதம செயலரை மாற்றுங்கள்; மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள்வடக்கு மாகாண பிரதம செயலாளர் நியமனத்தில் உடனடியாக மாற்றம் செய்யுமாறு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர், முன்னாள் முதலமைச்சர் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பத் தீர்மானித்துள்ளனர்.

வடக்கு மாகாணத்துக்குப் புதிய பிரமத செயலாளராக சமன் பந்துலசேன ஜனாதிபதியால் நியமிக்கப் பட்டுள்ளார். இது தொடர்பில் ஆராய்வதற்காக வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் உறுப்பினர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடி கலந்துரையாடி யிருந்தனர்.

இதன் போதே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இன்றைய கூட்டத்தில் 13 பேர் நேரில் சமூகமளித்து ஜனாதிபதிக்கு அனுப்பும் கடிதத்தில் ஒப்பமிட்டனர். 14 பேர் தொலைபேசி மூலமாக இந்தக் கடிதத்துக்கு ஆதரவைத் தெரிவித்தனர்.

நிர்வாக மொழியான தமிழ் மொழியைக் கொண்ட வடக்கு மாகாண சபையில் மக்களினதும் அதிகாரிகளினதும் தொடர்பாடல் கருதி இப் பதவிக்குப் பொருத்தமான தமிழ் அதிகாரிகளில் ஒருவரை நியமித்து உதவுமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என்று கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021

Leave a Reply