வடக்கு கிழக்கில் உள்ள இராணுவத்தை நீக்கினால், பொருளாதார இறைமையில் வலிமையினை கட்டியெழுப்பும் : பேராசிரியர் கணேசலிங்கம்

பொருளாதார இறைமையில் வலிமையினை கட்டியெழுப்பும்

இலங்கைத்தீவின் தமிழர் தாயக பகுதியான வடக்கு கிழக்கில் இருந்து இராணுவம் நீக்கம் செய்யப்படுமானால், அது அப்பகுதியில் பொருளாதார இறைமையில் வலிமையினை கட்டியெழுப்பும் என யாழ்.பல்கலைக்கழக அரசியல் துறை பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் எனும் தொனிப்பொருளில் நாடு கடந்த தமிழர் ஊடக மையம் நடாத்திய இணையவழி கருத்தரங்களில்  கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கின்ற அதன் இராணுவச் செலவினங்களை அடிப்படையாக வைத்து, தமிழர் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இராணுவ வெளியேற்றம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும் போதே பேராசிரியர்  இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

மேலும் இராணுவ நீக்கம் என்ற செயன்முறை சாத்தியமானால், இதன் வழியே ஓர் மாற்றத்தை வடக்கு, கிழக்கு தன்னுடைய இறைமையில் வலிமையான சூழலை கட்டியெழுப்பும் எனவும் தெரிவித்துள்ளார்.
Tamil News