தடையை நீக்குங்கள் உணவை அனுப்புகிறோம் – ரஸ்யா

கருங்கடல் பகுதியின் ஊடாக உக்ரைனில் இருந்து உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை ரஸ்யா அனுமதிக்க வேண்டும் என பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சர் பென் வலஸ் விடுத்த கோரிகையை பரிசீலித்த ரஸ்யா, பொருளாதார தடைகள் இருக்கும் போது அது சாத்தியமில்லை என தெரிவித்துள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் உணவுப்பொருட்களின் ஏற்றுமதிக்காக நாம் கருங்கடலின் ஊடாக கப்பல்களை அனுமதிக்க தயாராகவே இருக்கின்றோம். ஆனால் அதற்கு முன்னர் எம்மீது மேற்குலக நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகள் அகற்றப்பட வேண்டும் என ரஸ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அன்றி ருடன்கோவ் கடந்த வியாழக்கிழமை (26) தெரிவித்துள்ளார்.

ரஸ்யா மற்றும் உக்ரைனுக்கிடையிலான போரினால் உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையும் எச்சரித்திருந்தது.

Tamil News