இந்தியாவிடம் மன்றாடுகின்றது அனைத்துலக நாணய நிதியம்

இந்தியாவிடம் மன்றாடுகின்றது அனைத்துலக நாணய நிதியம்

உணவுப் பொருட்களின் ஏற்றுமதிக்கு பல நாடுகள் தொடர்ந்து தடைவிதித்து வருவதே தற்போதைய நெருக்கடிகளுக்கான காரணம் என அனைத்துலக நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்ரலீனா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.

இன்றுவரையிலும் 30 இற்கு மேற்பட்ட நாடுகள் தமது உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளன. தமது மக்களின் உணவுத் தேவை குறித்து இந்த நாடுகள் ஏற்றுமதித் தடையை விதித்துள்ளபோதும் அது ஏனைய நாடுகளை கடுமையாக பாதிக்கின்றது.

இந்தியாவும் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இது கோதுமை பொருட்களின் விலையை கடுமையாக அதிகரித்துள்ளது. நான் இந்தியாவிடம் இரந்து கேட்கிறேன் தடையை நீக்கும்படி.

இந்த தடையை ஏனைய நாடுகளும் பின்பற்றினால் உலகம் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tamil News