யாழ். நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபி அமைக்கப்பட்டிருந்த திருவுருவச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், தியாக தீபம் திலீபன் திருவுருவச் சிலையை மீளவும் உரிய இடத்தில் உடனடியாக வைக்குமாறு கோரியும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் திங்கட்கிழமை (28) வட,கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும்; பிற்பகல் 2 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தப்படவுள்ளது.
அதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூரடியிலும், திருகோணமலை மாவட்டத்தில் சிவன் கோவிலடியிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் கந்தசாமி கோவிலடியிலிருந்து கச்சேரி வரையும், அம்பாறை மாவட்டத்தில் தம்பிலுவில் மத்திய சந்தையடியில் ஆரம்பித்து திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரம் வரையும், மன்னார் மாவட்டத்தில் தந்தை செல்வா நினைவுத்தூபியடியிலும், வவுனியா மாவட்டத்தில் பொங்குதமிழ் நினைவுத் தூபியடியிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரையிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளத்திலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த போராட்டத்தில் அரசியல், மத, சிவில் தரப்பினர் உட்பட அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை



