இலங்கை கடல் எல்லைக்குள் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிப்பு

219 Views

சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில், மீனவர்கள் தொடர்பான வழக்கு இன்று (21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 03 வருட சிறைத்தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில் மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக  கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் குறிப்பிட்டார்.

இந்நிலையில், மீனவர்களிடம் கைப்பற்றப்பட்ட 02 படகுகளையும் அரசுடமையாக்க நீதி மன்றம்  உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply