காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டக்களப்பில் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டக்களப்பில் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டக்களப்பில் போராட்டம்

காணால் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நியாயம் கிடைக்க சர்வதேசத்தை தலையிட வலியுறுத்தி இன்று மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாளைய தினம் சர்வதேச மகளிர் தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றிகூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபி வரையில் ஊர்வலமாக வந்து அங்கு கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இந்த போராட்டத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் மற்றும் கோறளைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் குணசேகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பில் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி,அரசியல் கைதிகளை நிபந்தனையில்லாமல் விடுதலைசெய்,தமிழின படுகொலைக்கான சர்வதேச நீதி,பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டம் காரணமாக காந்திபூங்காவில் பெருமளவான காவல்துறையினரும்  புலனாய்வுத்துறையினரும் குவிக்கப்பட்டிருந்ததுடன் பெருமளவானோர் போராட்டத்தில் இணைந்திருந்தனர்.

Tamil News