சேதமாக்கப்பட்ட ஊடகவியலாளரின் புகைப்படக் கருவி – காவல்துறையில் முறைப்பாடு

317 Views

சேதமாக்கப்பட்ட ஊடகவியலாளரின் புகைப்படக் கருவி

சேதமாக்கப்பட்ட ஊடகவியலாளரின் புகைப்படக் கருவி

செய்தி சேகரித்து கொண்டிருந்த  வவுனியா ஊடகவியலாளளரின் புகைப்படகருவி அடித்து சேதமாக்கப்பட்ட சம்பவம் ஒன்று  வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா குருக்கள்புதுகுளம் பகுதியில் நேற்று (06) காலை இடம்பெற்ற விபத்தில் தந்தை சம்பவ இடத்திலையே பலியாகியதுடன் மகன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்திருந்தார். இதனையடுத்து ஆவேசம் அடைந்த  குறித்த பகுதி மக்கள் பேருந்தினையும் தாக்கியிருந்தனர்.

குறித்த சம்பவத்தினை செய்தி சேகரித்து கொண்டிருந்த  வவுனியா மாவட்ட ஊடகவியலாளரின் 1,40,000 ரூபா பெறுமதியான புகைப்பட கருவியினை குறித்த பகுதிமக்கள் பறிக்க முற்பட்டதோடு,  புகைப்பட கருவியினையும்  அடித்து சேதப்படுத்தியுள்ளார்கள்.

இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளரான இராசையா ஜெயசங்கர் பூவரசங்குளம் காவல் நிலையத்தில்  முறைப்பாடு  பதிவுசெய்துள்ளார்.

முறைப்பாடு வழங்கப்பட்டதையடுத்து  இது தொடர்பில்  பூவரசங்குள காவல்துறையினர்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

குறித்த விபத்து சம்பவத்தில் குருக்கள் புதுக்குளம் பகுதியை சேர்ந்த பு.சிறிதரன் (46), மற்றும் அவரது மகனான  சிறிதரன் டினோகாந் (14) ஆகியவர்களே  மரணமடைந்தவர்களாவர்.

Tamil News

Leave a Reply