“உங்களிடம் எனக்கான எந்த தீர்வும் இல்லை என அவர்களிடம் கூறினேன். நீங்கள் எனக்கு உதவவில்லை. இந்த வாழ்க்கை மேல் எனக்கு சோர்வு ஏற்பட்டு விட்டது. எனது மேல் எரிபொருளை ஊற்றிக்கொண்டே எரித்துக் கொண்டேன்,” என 2019ம் ஆண்டு தான் தீக்குளித்த நிகழ்வு குறித்து விவரிக்கிறார் ஜமால் எனும் அகதி.
கடந்த 2019ம் ஆண்டு தனது நிலையை விவரித்துவாறு மருத்துவ ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் முன்னிலையில் அவுஸ்திரேலிய தடுப்பு முகாம் செயல்படும் நவுருத்தீவில் ஜமால் தீக்குளித்தார்.