நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்

276 Views

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamil News

Leave a Reply