கைப்பேசி சின்னத்தில் ரணில் களமிறங்குவாா்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக கையடக்கத் தொலைபேசி சின்னத்தில் ரணில் விக்கிரமசிங்க களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பொதுச் சின்னம் குறித்து ஜனாதிபதி தீவிரமாக பரிசீலித்துவரும் நிலையில் அந்த பட்டியலில் கையடக்க தொலைபேசிச் சின்னம் முன்னிலையில் இருப்பதாக அறியமுடிகின்றது.

அமைச்சர் டிலான் அலஸின் கட்சியான ஐக்கிய மக்கள் கட்சியின் சின்னமே கைத்தொலை பேசிச் சின்னமாகும். அக்கட்சியின் ஆங்கில பெயரின் சுருக்கம் (யு.பி.பி.) என வருகின்றது. ஆக ஐக்கிய தேசியக் கட்சி (யு.என்.பி) என்ற விடயத்துடன் ஓரளவு ஒத்துபோகின்றது.

அத்துடன், நிலையான தொலைபேசி என்பது அந்த காலம், ஸ்மார்ட் போன் என்பதே இந்தக் காலம் எனக் கூறி, சஜித் அணிக்கு எதிராக பிரசாரம் செய்யவும் இதனை பயன்படுத்த முடியும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தச் சின்னம் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.