நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மறுத்த ரணில்

இந்த வாரம் இடம்பெற்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியடைந்துள்ள நிலையில், தேசியப் பட்டியல் மூலம் கிடைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரணில் விக்கிரமசிங்காவுக்கு கட்சி வழங்கியபோதும் அவர் அதனை நிராகரித்துள்ளார்.

43 வருடங்கள் தொடர்ந்து பதவிவகித்த தனக்கு இது தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளபோதும், கட்சியின் தோல்வியை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதே அதற்கான கரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, இந்த பதவி கட்சியின் மூத்த உறுப்பினர் ருவான் விஜயவர்த்தனாவக்கு வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.