26 அமைச்சர்களை நியமிக்க கோத்தா முடிவு

சிறீலங்காவில் பதவியேற்கவுள்ள அமைச்சரவையை 26 ஆக மட்டுமே பேணுவதற்கு சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா விரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் வெற்றிக்கிழமை (14) கண்டியில் உள்ள பௌத்த ஆலயமான தலதா மளிகையில் அமைச்சரவை பதவியேற்பு விழா இடம்பெறவுள்ளது. தேசிய அரசு அமையும்போது 45 அமைச்சர்களை நியமிப்பதற்கு 19 ஆவது திருத்தச்சட்டம் இடமளித்துள்ளபோதும் சிறீலங்கா அரச தலைவர் அதனை விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, 145 ஆசனங்களை பெற்றுள்ள மகிந்தா அணி, டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான், சிறீலங்கா சுதந்திரக்கட்சி, தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உதவியுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.