வாக்களித்த சிங்கள மக்கள்தான் அரசை விரட்டியடிக்க வேண்டும்; மனோ எம்.பி. கோரிக்கை

151 Views

ராஜபக்ச அரசை வீட்டுக்கு விரட்டியடிக்க அனுப்ப வேண்டும்வாக்களித்த சிங்கள மக்களே ராஜபக்ச அரசை வீட்டுக்கு விரட்டியடிக்க அனுப்ப வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தற்போது தெற்கு அரசியலில் ஆட்சி மாற்றம் என்ற ஒரு காற்று வீசுகின்றது. எனினும், எதிரணியினர் ஆகிய நாம் பொறுத்திருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

இந்த ராஜபக்ச அரசுக்கு வாக்களித்த சிங்கள மக்களே இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டில்தான் எதிர்க்கட்சியாகிய நாங்கள் உள்ளோம்.

ஆனால், எதிர்க்கட்சிகளாகிய நீங்கள் ஏன் இந்த அரசைக் கவிழ்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஒரு கேள்வி எழுகின்றது. அதற்கு நாங்கள் கூறும் பதில் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசை சிங்கள மக்களே “உங்களது ஆட்சி போதும்; வீட்டுக்குச் செல்லுங்கள்” என்று கூறும் நிலைதான் தற்போது உருவாகி உள்ளது. எனவே, சிங்கள மக்களே இன்றைய ராஜபக்ச அரசை வீட்டுக்கு அனுப்ப முயற்சிக்கும்போது எதிரணியினராகிய நாம் தற்போது அவசரப்பட வேண்டிய தேவையில்லை” என்றார்.

ilakku Weekly Epaper 152 october 17 2021 Ad வாக்களித்த சிங்கள மக்கள்தான் அரசை விரட்டியடிக்க வேண்டும்; மனோ எம்.பி. கோரிக்கை

Leave a Reply