பொதுஜன பெரமுன பெரு வெற்றியை நோக்கி நகருகிறது ;துடைத்தழிக்கப்படுகிறது ஜக்கிய தேசியக்கட்சி

பொதுஜன பெரமுன பெரு வெற்றியை நோக்கி நகருகிறது சஜித் அணிக்கு பின்னடைவு. துடைத்தழிக்கப்படுகிறது ஜக்கிய தேசியக்கட்சி
சிறீலங்காவில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகும் நிலையில் வெளியாகியுள்ள சில முடிவுகளின் பிரகாரம் பொதுஜன பெரமுன சிங்கள மக்களின் ஏகோபித்த வாக்கைப் பெற்று அங்குள்ள 17 தேர்தல் மாவட்டங்களில் உள்ள 167 பாராளுமன்ற ஆசனங்களில் பெரும்பான்மை ஆசனங்களை வெல்லும் நிலைக்கு நகருகிறது.
மறுபுறத்தில் ஜக்கிய மக்கள் சக்தியாக களம் கண்ட சஜித் பிரேமதாசா அணி சனாதிபதித் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட குறைந்த வாக்குகளைப் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளது. ரணில் தலைமையிலான ஜக்கிய தேசியக்கட்சி துடைத்தழிக்கப்படும் நிலையை சந்தித்துள்ளது.
காலி தேர்தல் மாவட்டத்தில் பலப்பிட்டிய தொகுதியில் சனாதிபதித் தேர்தலில் 66.07 சதவீத வாக்குகளைப் பெற்ற பெரமுன இம்முறை அங்கு 73.05 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. மறுபுறத்தில் 29.46 சதவீத வாக்குளை சனாதிபதித் தேர்தில் பெற்ற சஜித் அணி இம்முறை 17.25 சதவீதத்திற்கு கீழிறங்கியுள்ளது.
அதேபோன்று மாத்தறை தேர்தல் மாவட்டத்தில் டெவினுகர தோகுதி முடிவுகளின் பிரகாரம் சனாதிபதித் தேர்தலில் 64.04 சதவீத வாக்குகளைப்பற்ற பொதுஜன பெரமுன இம்முறை 73.02 சமவீத அதிகரித்த வாக்குகளைப் பெற்றுள்ளது. மறுபுறத்தில் சஜித் அணி அங்கு 30.29 சதவீத வாக்குகளில் இருந்து 16.39 சதவீத வாக்குகளிற்கு கீழிறங்கியுள்ளது.
இதே போன்ற நிலை சிங்கள தேசத்தின் தொகுதிகளில் தென்படுகின்றது. அதேவேளை கடந்தமுறை 4 ஆசனங்களையே பெற்ற ஜே.வி.பி இம்முறையும் பின்னடைவையே சந்திக்கிறது.