அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தின் வரைவு வர்த்தமானியில் வெளியீடு

60 Views

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தின் வரைவு வர்த்தமானி ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.

உத்தேச 22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இந்த விடயத்தினைக் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார்.

ஜனாதிபதிக்கான அதிகாரங்களைக் குறைத்து, நாடாளுமன்றத்திற்கு அதிக பலத்தினை வழங்கும் வகையில் குறித்த அரசியலமைப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply