ஜனாதிபதி முறையுடன் மாகாணசபைகளும், விகிதாசார தேர்தல் முறையும் போக வேண்டும் என்ற கருத்து ஆபத்தானது – மனோ கணேசன்

258 Views

“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அகற்றப்படுமானால், 13ம் திருத்தம் அதனோடு மாகாணசபைகளும், அதனோடு விகிதாரசார தேர்தல் முறைமையும் போக வேண்டும் என்ற கருத்து அரங்குக்கு மெல்ல வருகிறது. இது ஆபத்தானது” என தமிழ் முற்போக்கு கூட்டணி கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தனது  முகநூல்  தளத்தில் தெரிவித்துள்ளார்.

‘கண்களை விற்று சித்திரம் வாங்க நாம் தயார் இல்லை. அரசியலமைப்பை திருத்துகிறோம் என்ற போர்வையில், இன்றைய அரசியலமைப்பின் கீழ் இருக்கும் இந்த குறைந்தபட்ச உரிமைகள் மீது, எவரும் கை வைத்தால், அதற்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணி உயிரை கொடுத்து போராடும்.

வடக்கு கிழக்கின் ஏனைய தமிழ் கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளும் இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பில் தமது நிலைப்பாடுகளை பகிரங்கமாக அறிவித்தால், ஒட்டு மொத்த தமிழ், முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடுகளை நாம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நாட்டுக்கு அறிவிக்கலாம்” என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Tamil News

Leave a Reply