கோட்டா அரசுக்கு எதிராக கொழும்பில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் – இராணுவத்தினர் வரவழைப்பு

கொழும்பில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள்

கொழும்பில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள்

கோட்டா அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று சனிக்கிழமை கொழும்பில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள உள்ள நிலையில், பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு விசேட காவல்துறை குழுவினர் மற்றும் இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் இன்று அரசுக்கு எதிரான பாரிய போராட்டங்களை முன்னெடுக்கத் தீா்மாளித்துள்ள நிலையில் காலி முகத்திடம் உள்ளிட்ட பல இடங்களில் காலையிலேயே போராட்டங்கள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

கொழும்பில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள்

இதனைவிட, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு நீதி கோரி கொச்சிக் கடையிலிருந்து நீதிகோரும் நடைபயணம் முன்னெடுக்கப்பட உள்ளது. அத்துடன், கோட்டை தொடரூந்து நிலையம் முன்பாக ஆா்ப்பாட்டம், பொரளையில் மௌனப் போராட்டம், நுகோகொடையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் என்பன இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் காலி முகத்திடல் மைதானத்தில் இன்று கூடும் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக  காவல்துறையினரும் காவல்துறை விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டு வருவதுடன், காலி முகத்திடல் பகுதியில் சில பகுதிகள் போராட்டக்காரர்கள் ஒன்று கூட முடியாதவாறு மூடப்பட்டு அறிவித்தல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

WhatsApp Image 2022 04 09 at 12.27.38 PM கோட்டா அரசுக்கு எதிராக கொழும்பில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் - இராணுவத்தினர் வரவழைப்பு

காவல்துறை  கலகத் தடுப்பு பிரிவினர் மற்றும் மேல் மாகாணத்தின் ஏனைய காவல்துறை  பிரிவுகளில் இருந்து விசேட காவல்துறை  குழுக்களும் இராணுவத்தினரும் பாதுகாப்பு வழங்குவதற்காக கொழும்புக்கு வரவழைக்கப் பட்டுள்ளதாக   தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய போராட்டங்களின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகம் அல்லது பிரதமர் இல்லத்துக்குள் நுழைய முயற்சித்தால் கடுமையான எதிர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கொழும்பு  காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.