இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்படுவார்கள் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள வீதியில் இடம்பெற்றது போல ஆர்ப்பாட்டக்காரர்கள் பல மணிநேரம் முக்கிய வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களிற்கும் நாடாளுமன்றம் செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தவேண்டியது எங்கள் கடமை என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொலிஸார் படையினர் பிரதேச செயலாளர்களின் உதவியுடன் அவசரகாலநிலையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தின் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தனியாக அதிகாரிகளை சந்தித்தார் என அவர் தெரிவித்துள்ளார்.

நிலைமை கட்டுப்பாட்டை மீறி செல்வதை தவிர்ப்பதற்காகவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் அவசரகாலநிலை அறிவிக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

Tamil News