351 Views
அதானிக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
இந்திய அதானி நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானிக்கு எதிராக பம்பலப்பிட்டியில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இதன் போது போராட்டக்காரர்கள் அதானி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி செயற்றிட்டத்திற்காக அதானி குழுமத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ள உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த உடன்படிக்கை வௌிப்படைத்தன்மையுடன் அமையவில்லை என எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.