258 Views
பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளடங்களாக மக்களை வன்முறைக்குள்ளாக்கும் அனைத்து சட்டங்களையும் நீக்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் இன்று(சனிக்கிழமை) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் தொழிற்சங்க மக்கள் ஒன்றியம், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்து இருந்தனர்.
பயங்கரவாத தடை சட்டம் மற்றும் அனைத்துவித வன்முறை சட்டங்களையும் உடனடியாக நீக்கக் கோரியும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாகத் தடுத்து வைத்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.