வவுனியாவிலும் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு எதிராக போராட்டம்

287 Views

எரிபொருள் விலை ஏற்றத்திற்கு எதிராக

வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு எதிராக  தெரிவித்து தனியார் பேருந்து தரப்பினர் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டமையால் பதட்டமான சூழல் ஏற்பட்டிருந்தது.

குறிப்பாக வெளி மாகாணங்களிற்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் ஏ9 வீதியின் குறுக்காக நிறுத்தப்பட்டு போக்குவரத்தினை தடை செய்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் போராட்டத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

குறித்த போராட்டம் காரணமாக ஏ9 வீதியுடனான போக்குவரத்து பலமணி நேரங்கள் தாமதமாகியிருந்தது.

IMG 1650373137479 வவுனியாவிலும் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு எதிராக போராட்டம்

அதே நேரம் திருகோணமலை ஜமாலியா சந்தியில் வீதியை மறித்து இளைஞர்கள் டயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இது போன்று உவர் மலை சந்தியிலும் கவனயீர்ப்பில் ஈடுபட்ருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply