இலங்கை-ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு – ஒருவர் உயிரிழப்பு, ரம்புக்கனையில் ஊரடங்கு!

WhatsApp Image 2022 04 19 at 8.55.22 PM இலங்கை-ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு - ஒருவர் உயிரிழப்பு, ரம்புக்கனையில் ஊரடங்கு!

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ரம்புக்கனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில்  காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளதை அடுத்து அங்கு காவல்துறை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரம்புக்கனை பகுதியில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் இன்று ஏற்பட்ட மோதலின்போது கூட்டத்தினரை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார். அத்துன் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 4 பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் ஒருவர் ஆபத்தான கட்டத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ரம்புக்கனை மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

WhatsApp Image 2022 04 19 at 8.57.06 PM இலங்கை-ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு - ஒருவர் உயிரிழப்பு, ரம்புக்கனையில் ஊரடங்கு!

போராட்டக்காரர்களை நோக்கி காவல்துறையனர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இருந்து பல வெற்றுத் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தப் பகுதியில் போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டு தாக்குதலையும் நடத்தினர்.

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்தும், ஜனாதிபதி மற்றும் அரசு பதவி விலக வலியுறுத்தியும் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இன்று போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

வீதிகள், இரயில் பாதைகளை மறித்தும், ரயர்களைக் கொழுத்தியும் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

ரம்புக்கனை பிரதேச மக்கள் இன்று அரசாங்கத்திற்கு எதிராக வீதிகளை மறித்து டயர்களை எரித்தும் புகையிரத பாதைகளை மறித்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

WhatsApp Image 2022 04 19 at 8.55.25 PM இலங்கை-ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு - ஒருவர் உயிரிழப்பு, ரம்புக்கனையில் ஊரடங்கு!

இதனால் பல பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலிலேயே ஒருவர் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானதுடன், 11 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.