கோட்டாபயவிற்கு எதிராக போராட்டம்-கொழுப்பில் காவல்துறை மற்றும் இராணுவத்தினர் குவிப்பு

200 Views

நாளை 9ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சேவை பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ள நிலையில், கொழும்பின் பாதுகாப்புக்கு எட்டாயிரம் காவல்துறையினரும் இராணுவத்தினரும் மேலதிகமாக அழைக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதும் கொழும்பில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள படையினருக்கு மேலதிகமாக இந்த எட்டாயிரம் பேரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மூவாயிரம் காவல்துறையினரும் 5 ஆயிரம் இராணுவத்தினரும் இவ்வாறு வெளி மாவட்டங்களில் இருந்து கொழும்புக்கு பாதுகாப்பு பணிகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதிக்குள் இன்று மற்றும் நாளை  போராட்டக்காரர்கள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு காவல்துறையினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான்  நீதிமன்றம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply