பிரதமரின் தலைமையில் அரசாங்கத்தை கொண்டு செல்லும் முன்மொழிவு ஏகமனதாக நிறைவேற்றம்

பிரதமரின் தலைமையில் அரசாங்கம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  தலைமையில் அரசாங்கத்தை வலுவாக கொண்டு செல்லும் முன்மொழிவு இன்று   பாராளுமன்ற குழு அறை இலக்கம் 1 இல் இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி  நிலைமைக்கு மத்தியில் அரசாங்கம் அதனை வலுவாக எதிர்கொள்ள வேண்டும் எனவும், அதற்கு  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  தலைமையில் அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப்  முன்மொழிந்தார்.

அந்த முன்மொழிவிற்குஅனைத்து உறுப்பினர்களும்   ஏகமனதாக ஆதரவளித்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் யூ.கே.சுமித்  முன்மொழிவை உறுதிசெய்தார்.

 ஒருசில வாரங்களுக்குள் எரிபொருள் மற்றும் மின்தடை பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக இதன்போது கருத்து தெரிவித்த வலுசக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர   தெரிவித்தார். அதேபோன்று எரிவாயு (கேஸ்) பிரச்சினையையும் ஒருசில வாரங்களுக்குள் தீர்க்க முடியும் என கல்வி மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பதிரன   குறிப்பிட்டுள்ளார்.

Tamil News