பணத்தை அச்சிடுவது நீரிழிவு நோயாளிக்கு அதிக சீனியை வழங்குவதை போன்றது- மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர்

142 Views

பணத்தை அச்சடிப்பது நீரிழிவு நோயாளிக்கு அதிக சீனியை வழங்குவது போன்றது என மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி W.விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாதங்களில் சம்பளம் மற்றும் ஓய்வுதீயம் போன்ற அரச செலவினங்களிற்காக பணத்தை அச்சிட வேண்டியிருக்கும் என பிரதமர் தொடர்ச்சியாக தெரிவித்து வருவது குறித்து கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை டிரில்லியன் ரூபாய்களை அச்சிட வேண்டியிருக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், பொருளாதார நிலையை ஸ்திரப்படுத்துவதற்கு மத்திய வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளிற்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

இது நீரிழிவு நோயாளிக்கு அதிக சீனியை வழங்குவதை போன்றது என மத்திய வங்கி ஏற்பாடு செய்த மெய்நிகர் கலந்துரையாடலில் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நாணய சட்ட மூலம் வழங்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட மத்திய வங்கியின் சுயாதீன தன்மைக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamil News

Leave a Reply